இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்த இலங்கை பரிசீலனை: அமைச்சர் தகவல்
இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தகவல் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி இந்தியா வருகை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிகழ்வுக்கு பிறகு ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே முதல் முறையாக கடந்த 20ம் திகதி 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை வந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார், அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து செய்யப்பட்டது.
PTI
இந்திய ரூபாயை பொது பணமாக அறிவிக்க ஆலோசனை
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய பயணம் தொடர்பாக நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி பத்திரிகையாளர்களை தலைநகர் கொழும்புவில் சந்தித்தார்.
அப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே துறைமுக இணைப்பு முக்கியத்துவம் மற்றும் அடுத்த கட்ட முதலீடு தேவை போன்றவை விவாதிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கும் நன்மை பயக்கும் அரசாங்கத்திற்கு இடையிலான வழிகள் மற்றும் தனியார் துறை வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Pexels
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு உதவுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை இணைத்து கொள்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் டாலர், யூரோ மற்றும் யென் போன்றவை பொது பணமாக ஏற்றுக் கொள்வது போல் இந்திய ரூபாயையும் பொது பணமாக இலங்கையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
இதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்களின் நாணய மாற்றத்திற்கு தேவை இருக்காது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |