ஹமாஸ் அமைப்புடன் இந்திய ஆய்வு மாணவருக்கு தொடர்பா? அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்
இந்திய கல்வியாளர் ஒருவர் ஹமாஸுடன் தொடர்பு இருப்பதாக கூறி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸ் தொடர்பு
15 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு சாதாரண நிகழ்வு, இந்திய கல்வியாளர் பதார் கான் சூரியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.
அதாவது, டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில், மாணவர் ஒருவர் காஸாவுக்கு சர்வதேச உதவி வாகன அணி செல்வதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்யும் பாலஸ்தீன பகுதியான காசாவிற்குச் செல்லும் இந்த பயணம், மோதல் ஆய்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்த நிலையில், கிட்டத்தட்ட 150 நபர்களில் ஒருவராக கல்வியாளர் பதார் கான் சூரியும்(Badar Khan Suri) சென்றுள்ளார்.
இந்த காசா பயணத்தில் கல்வியாளர் பதார் கான் சூரி, ஹமாஸ் ஆலோசகரின் மகளான மாஃபெஸ் சலேஹ் என்பவரை சந்தித்து பழகியதுடன் திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் 10 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்த நிலையில் பிறகு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
அங்கு, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பதார் கான் சூரி மதிப்புமிக்க முதுகலை ஆய்வு நிபுணர் பதவியைப் பெற்றார்.
3 ஆண்டுகள் வர்ஜீனியாவில் வசித்த நிலையில், மார்ச் 17-ம் திகதி அமெரிக்க காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
கைது மற்றும் குற்றச்சாட்டுகள்
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் உதவி செயலாளர் ட்ரிசியா மெக்லாஃப்ளின், முதுகலை ஆய்வு நிபுணர் சூரி சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி மற்றும் ஹமாஸின் மூத்த ஆலோசகருடன் நெருங்கிய தொடர்புகள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று X தளத்தில் அறிவித்துள்ளார்.
இருப்பினும், சூரி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
நீதிமன்ற வழக்கு
சூரி மாணவர் விசாவில் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நுழைந்திருந்தாலும், நீதிமன்றம் அவரது நாடு கடத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்தச் சம்பவம், இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |