21 இந்திய மாலுமிகள் இந்த கப்பலை தாக்கிய ஈரான்: வெளியான வீடியோ ஆதாரம்
ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை ஈரானிய புரட்சிகர காவல் படை சுற்றி வளைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
கப்பலை சுற்றி வளைத்த ஈரானியப் படைகள்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி மிகவும் பதற்றமான இடமாக விளங்கி வருகிறது.
இப்பகுதியில் கப்பல்களை இயக்கும் மாலுமிகள் மிகுந்த அச்ச உணர்வுடன் தான் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் நிலவிவரும் கடுமையான ஆபத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஏப்ரல் 22ம் திகதி நடந்த சம்பவம் தொடர்பான பழைய வீடியோ காட்சி ஒன்றை இந்திய ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியன்(FSUI) வெளியிட்டுள்ளது.
பனாமா கொடி ஏந்திய இந்த கப்பலில் கிட்டத்தட்ட 21 மாலுமிகள் பணியாற்றி இருந்தனர்.
மேலும் வெளியான அந்த வீடியோவில், கப்பலை ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை சேர்ந்த கப்பல்கள் சூழ்ந்து தாக்குதல் நடத்தியதை பார்க்க முடிகிறது.
On 22 April, in the Strait of Hormuz, a vessel carrying 22 crew members, of whom 21 were Indian, faced a deeply distressing situation.
— FSUI (@FSUIINDIA) August 20, 2026
These were not pirates.
They were naval forces of the IRGC.
Videos show several small boats surrounding the vessel, the intensity of the… pic.twitter.com/5UgxtZETSd
அத்துடன் ஈரானிய படகுகளில் இருந்து ராக்கெட் மூலம் இயக்கப்படும் குண்டுகள் வணிக கப்பல் மீது வீசப்பட்டதும், மாலுமிகள் உடனே கப்பலுக்குள் பாதுகாப்பான இடங்களில் பதுங்குவதும் அதில் பதிவாகியுள்ளது.
அதே சமயம் கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |