ChatGPT நிறுவனத்திற்கு chat.com டொமைனை மிகப்பாரிய தொகைக்கு விற்ற இந்தியர்.!
ChatGPT நிறுவனத்திற்கு chat.com என்ற டொமைனை மிகப்பாரிய தொகைக்கு இந்தியர் ஒருவர் விற்றுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் HubSpot நிறுவனத்தின் இணை நிறுவனர் தர்மேஷ் ஷா, chat.com என்ற டொமைன் பெயரை OpenAI நிறுவனத்திற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் விற்றுள்ளார்.
தற்போது, chat.com தளத்திற்கு சென்றால் OpenAI நிறுவனத்தின் பிரபலமான ChatGPT பக்கத்திற்கு தானாகவே திருப்பிவிடப்படும்.
OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் (Sam Altman) இதனை தனது X பக்கத்தின் மூலமாக அறிவித்துள்ளார், மேலும் இதனை தர்மேஷ் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் இதை சுமார் 8 இலக்கு தொகைக்கு வாங்கியதை சுட்டிக்காட்டி, அதற்கும் அதிக விலையில் OpenAI-க்கு விற்பனை செய்ததாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே, 2023-ஆம் ஆண்டு chat.com டொமைனை வாங்கிய போது, "சாட் அடிப்படையிலான பயனர் அனுபவம் (ChatUX) மென்பொருளின் அடுத்த பாரிய மாறுதலாக இருக்கும்" என்று அவர் LinkedIn இல் பதிவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Indian-Origin HubSpot Founder Sells Chat.com Domain To OpenAI, Dharmesh Shah CTO of HubSpot, OpenAI ChatGPT