வெளிநாடொன்றில் டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்
Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளார்.
இந்தியரான வினோத் என்பவர் நோர்வே நாட்டில் டெக்சி ஒன்றில் பயணித்துள்ளார்.
டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்

29 கிலோமீற்றர் தூரத்தை 22 நிமிடத்தில் அவர் எட்டிய நிலையில், டெக்சி கட்டணம் 934 Norwegian Krone என பில் வந்துள்ளது.
Sharing my today's taxi ride experience in Norway. 🇳🇴🚕
— Vinod (@turiyatman) September 16, 2026
22 minutes. 29 km. Smooth ride and a great experience.
The bill? 934 NOK — roughly ₹9,580. 😳
There are a few things India does far better than Norway… this is one of them. 🇮🇳😊
I’ve had much more affordable Uber rides… pic.twitter.com/aNk1fCqEXF
வழக்கமாக ஆசியர்கள் செய்வதைப் போலவே அதை தன் நாட்டுப் பணமாக மாற்றி கணக்குப் பார்த்துள்ளார் அவர்.
அவ்வகையில், இந்திய மதிப்பில் டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என வரவே, ஆச்சரியமடைந்துள்ளார் அவர்.
அது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள அவர், தன் நாட்டில் இவ்வளவு தொலைவு பயணிக்க சிறிய தொகைதான் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இடுகை வேகமாக பகிரப்பட்ட நிலையில், சிலர், நோர்வேயில் சராசரி மாதாந்திர ஊதியம் இந்திய மதிப்பில் 6.5 லட்ச ரூபாய் என்றும், ஆகவே, அங்கு டெக்சி கட்டணம் அப்படித்தான் இருக்கும் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.