கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர்
கனடாவில் வாழும் இந்தியர் ஒருவர், தன் வீட்டிலிருந்த மரங்களில் உபரி கிளைகளை வெட்ட பணியாளர் ஒருவருக்கு 700 டொலர்கள் கொடுத்ததைக் குறித்த செய்தி ஒன்றை சமூக ஊடகங்கம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அந்த செய்தி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துவருகிறார்கள் இணையவாசிகள்.
மரம் வெட்ட 700 டொலர்கள்
கனடாவில் வாழும் இந்தியரான விஷால், தன் வீட்டில் வளர்க்கும் மரங்களில் உள்ள உபரிக் கிளைகளை வெட்டி சீராக்குவதற்காக ஒருவரை அழைத்துள்ளார்.

அந்த நபர் அந்த வேலைக்கு 700 டொலர்கள் கேட்டாராம். விஷால் சம்மதிக்க, சரியாக ஒரு மணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டாராம் அந்த நபர்.
700 கனேடிய டொலர்கள் என்பது இந்திய மதிப்பில் 49,113 ரூபாய், இலங்கை மதிப்பில் 1,68,166.32 ரூபாய்.
ஆக, ஒரு மணி நேர மரம் வெட்டும் வேலைக்கு 49,000 ரூபாய் சம்பாதிக்கிறாரா அந்த நபர் என்னும் ரீதியில் யோசிக்கத் துவங்கிவிட்டார் விஷால்.
ஆக, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கனடாவில் இந்த மாதிரி வேலைகள் கூடச் செய்யலாம் போலிருக்கிறதே, ஒரே மணி நேரத்தில் 49,000 ரூபாய் சம்பாதிக்கலாமே என விஷால் குறிப்பிட, அதற்கு மக்கள் பலவிதங்களில் ரியாக்ட் செய்துவருகிறார்கள்.
ஆம், அலுவலக வேலையை விட இந்த மாதிரி வேலையில் நல்ல வருவாய் உள்ளது என்று சிலர் கூற, மற்றவர்களோ, அந்த வேலையில் பல பிரச்சினைகளும் உள்ளன என்கிறார்கள்.
பிரதர், அந்த நபர் தன் வேலைக்கான கருவிகளுக்கு வாடகை கொடுக்கவேண்டும், வேலை ரிஸ்க்கான வேலை, மரம் வெட்டும்போது கிளைகள் யார் மீதாவது விழுந்து காயம் பட்டுவிட்டால் அவரது வேலைக்கே ஆபத்து உள்ளது. அதையும் கருத்தில் கொள்ளவேண்டுமே என்கிறார் ஒருவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |