அமெரிக்காவில் 28 வயது இந்தியர் சுட்டுக்கொலை! தப்பியோடிய மர்ம நபர்
அமெரிக்காவின் சிகாகோவில் 28 வயது இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியர் மீது துப்பாக்கிச்சூடு
சிகாகோ நகரில் உள்ள லிங்கன் பூங்காவில் இளைஞர் ஒருவர் இறந்துகிடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் கிடந்த இளைஞரை மீட்டனர்.
அதன் பின்னர் இல்லினாய்ஸ் மேசோனிக் மருத்துவ மையத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
தப்பியோடிய மர்ம நபர்
பின்னர் நடந்த விசாரணையில் இறந்த நபர் இந்தியாவைச் சேர்ந்த கெவின் படேல் (28) என தெரிய வந்தது.
அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர் தப்பியோடியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், குறித்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |