இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இந்தியருக்கு இராணுவத்தால் ஏற்பட்ட அபாயம்
சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் செல்ல முயன்ற இந்தியர் ஒருவர் ஜோர்தான் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சட்டவிரோதமாக இஸ்ரேல்
குறித்த சம்பவமானது பிப்ரவரி 10ம் திகதி நடந்துள்ளதாக தெரிய வந்த நிலையில், தற்போது அவர் இந்தியாவின் கேரள மாநிலம் தும்பா பகுதியை சேர்ந்த தோமஸ் கேப்ரியல் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜோர்தானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில், துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இந்திய பிரஜை ஒருவரின் சோகமான முடிவு என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், இறந்தவரின் சடலத்தை கொண்டு செல்வதற்காக ஜோர்தானிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
47 வயதான பெரேரா, பார்வையாளர் விசாவில் ஜோர்தானுக்கு சென்றுள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக இஸ்ரேல் செல்ல முயன்றுள்ளதாகவே கூறப்படுகிறது.
இவருடன் எடிசன் என்பவரும் இஸ்ரேலுக்கு நுழைய முயன்ற நிலையில், அவரும் காயமடைந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சையை அடுத்து, அந்த நபர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னணியில் மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |