இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்: அணியில் அதிரடி மாற்றங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் புதிய கேப்டன் யார்?
நடப்பு 2026 ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர்கள் ஆகியவற்றில் விளையாட உள்ளது.
இந்நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு சனிக்கிழமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய வீரர்கள் நீக்கம்
இந்த அறிவிப்பில் பல அதிர்ச்சிகரமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதுடன் அணியிலிருந்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகிய வீரர்களும் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Here's a look at #TeamIndia's squad for the Asian Games 2026 in Japan this September 👏#AsianGames pic.twitter.com/euMfmhWEcN
— BCCI (@BCCI) June 6, 2026
அதே சமயம் தன்னுடைய இளம் வயதில் அதிரடியான பேட்டிங் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 3 டி20 தொடர்களுக்கான அணியிலும் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரங்கள்
Presenting #TeamIndia's T20I squads for the tours of England & Ireland 2026 🇮🇳#ENGvIND | #IREvIND pic.twitter.com/f84kSSAIDf
— BCCI (@BCCI) June 6, 2026
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), சிவம் துபே, திலக் வர்மா(துணை கேப்டன்), நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி.
ஜப்பானில் நடைபெறும் ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணி
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), சிவம் துபே, திலக் வர்மா(துணை கேப்டன்), நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா சிங், வைபவ் சூர்யவன்ஷி.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |