பெரியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது நிறுத்தம்.., இந்திய மாநிலம் அறிவிப்பு
இந்த இந்திய மாநிலம் பெரியவர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், விதிவிலக்கு உள்ளது.
ஆதார் அட்டை நிறுத்தம்
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தார் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா .
இந்த அறிவிப்பில், பட்டியல் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் (SC) மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்களை தவிர இன்னும் ஒரு வருடத்திற்கு ஆதார் அட்டை வழங்கப்படாது என்று அசாம் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்கான காரணத்தை கூறிய சர்மா, "அசாமில் நுழைந்து இந்திய குடிமகன் என்று கூறி யாரும் (சட்டவிரோத வெளிநாட்டினர்) ஆதார் அட்டையைப் பெற முடியாது என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்" என்றார்.
இன்னும் ஆதார் பெறாத பிற சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் மாதம் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு வழங்கப்படும்.
அரிதான சந்தர்ப்பங்களில் ஆதார் அட்டையை வழங்க மாவட்ட ஆணையருக்கு அதிகாரம் இருக்கும், மேலும் ஆதார் அட்டையை வழங்குவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் எஸ்பி அறிக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாய அறிக்கையை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறினார் முதல்வர் சர்மா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |