குடும்பத்தினரை உயிரோடு கொளுத்த முயற்சி... வெளிநாட்டில் சிக்கிய இந்திய மாணவர்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மாணவர், தீவைப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பயங்கரவாத மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரட்டல் விடுத்ததாக
டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவரான 22 வயது மனோஜ் சாய் லெல்லா, அவரது குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, திங்கட்கிழமை அன்று ஃபிரிஸ்கோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவியல் பிரச்சனையை அடுத்து குடும்ப உறுப்பினர்கல் மீது அவர் மிரட்டல்கள் விடுத்ததாக புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, லெல்லாவின் வீட்டிற்குச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, லெல்லா அந்த வீட்டிற்குத் தீ வைக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
லெல்லா மீது, குடியிருப்பு அல்லது வழிபாட்டுத் தலத்திற்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல் (முதல் நிலை குற்றவியல் குற்றம்) மற்றும் குடும்ப உறுப்பினர் அல்லது வீட்டு உறுப்பினருக்கு எதிராக பயமுறுத்தும் அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், வழிபாட்டுத் தலத்திற்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதைக் குறிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, தீவைப்பு குற்றச்சாட்டிற்கு 100,000 டாலரும், சிறு குற்றச்சாட்டிற்கு 3,500 டாலரும் பிணைத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |