உக்ரைனில் ரஷ்ய படை குண்டுவீச்சில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன்! அவரின் உடல் எங்கேயுள்ளது?
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவரின் உடல் உக்ரைனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த 24ம் திகதி முதல் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.இந்த 2 நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தாலும் போரும் 13வது நாளாக உச்சக்கட்டம் அடைந்து உள்ளது.
இந்த நிலையில் 6ஆம் நாள் நடந்த போரின் போது ரஷ்ய படையின் குண்டுவீச்சில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்து விட்டார்.
நவீன் இறந்தது அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் நவீனின் உடல் உக்ரைனில் உள்ள பிணவறையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தாக்குதல் ஓய்ந்தபின் இந்தியா கொண்டு வரப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.