வெளிநாட்டில் 19 வயது இந்திய மாணவன் பரிதாப மாரணம்! யார் அவர்? வெளியான புகைப்படம் மற்றும் விபரம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபியில் இருக்கும் Yas பகுதியில், கடந்த புதன் கிழமை இளைஞர் ஒருவர் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், அவர் யார் என்பது குறித்த எந்த ஒரு விவரமும் வெளியாகமால் இருந்தது.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த நபரின் பெயர் Ibad Ajmal என்பதும், விபத்து நடந்த அன்று தனியாக காரை ஓட்டி வந்த இவர், அதிவேகமாக மரத்தின் மீது மோதியதில், படுகாயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கேரளா மாநிலம் Kannur மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த மாதம் தான் கேரளாவிற்கு வந்து தன்னுடைய பெற்றோரிடம் நேரத்தை செலவிட்டு திரும்பியுள்ளார்.
குறித்த மாணவன், பிரித்தானியாவின் University of South Wales-ன் Cardiff காம்பசில் aircraft engineering and maintenance systems படித்துள்ளார்.
இவர் இறுதிச்சடங்கு புதன் கிழமை மாலை, இங்கிருக்கும் அவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நடத்தினர்.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில், இது போன்ற விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, காரின் முன் மற்றும் பின்னால் இருப்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் போட வேண்டும்.
அப்படி போட தவறினால், அவர்களுக்கு 400 திர்ஹாம் அபராதம் விதிப்பதுடன், இது நீடித்தால், அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து கூட செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.