வீட்டை அடமானம் வைத்து மகனை பிரித்தானியா அனுப்பிய பெற்றோர்! 40 டிகிரி வெப்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் கடலில் அடித்து செல்லப்பட்டு இந்திய இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அஜமிரை சேர்ந்த சுஜல் சஹு (21). இவர் கேம்பிரிட்ஜில் உள்ள Anglia Ruskin பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி எசக்ஸில் உள்ள கடலில் குளித்த போது சுஜல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதையடுத்து கடுமையான தேடுதலுக்கு பின்னர் அவரின் உடல் அடுத்த நான்கு நாட்களுக்கு பின்னர் கிடைத்தது. ஜூலை 19 அன்று பிரித்தானியாவில் வெப்பம் உச்சக்கட்டத்தில் இருந்த போதே அவர் கடலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
Sujal Sahu / Facebook
அந்த பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதால் நண்பர்களுடன் கடற்கரைக்கு சென்றிருக்கிறார். மேலும் 5 பேர் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சுஜலின் பெற்றோர் தங்கள் வீட்டை அடமானம் வைத்து அவரை படிக்க பிரித்தானியாவுக்கு அனுப்பினார்கள் என தெரியவந்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளாக சுஜல் பிரித்தானியாவில் வசித்து வந்தார்.
இந்தியாவில் இருந்து பிரித்தானியா செல்வதற்கான சுஜல் குடும்பத்தினரின் பயணச் செலவை Anglia Ruskin பல்கலைக்கழகம் செலுத்துகிறது.
கல்லூரியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்த நேரத்தில் சுஜாலின் குடும்பத்தாருடன் எங்களது எண்ணங்களும், அனுதாபங்களும் உள்ளன. நாங்கள் சக மாணவர்களுக்கும் ஆதரவை கொடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.
ITV News Anglia