அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி பலி: இருவர் படுகாயம்
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்திய மாணவி உயிரிழப்பு
அமெரிக்காவின் டென்னசி(Tennessee) மாநிலம், மெம்பிஸ் நகரில் நள்ளிரவுக்குப் பிறகு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு இந்திய மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த 26 வயதான நாக ஸ்ரீ வந்தனா பரிமளா(Naga Sri Vandana Parimala). மெம்பிஸ்(Memphis) பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (எம்.எஸ்.) படித்து வந்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த வணிகர் குடும்பத்தைச் சேர்ந்த வந்தனா, உயர்கல்விக்காக 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார்.
விபத்துக்கான காரணம்
விபத்தில் ஈடுபட்ட வாகனங்களில் ஒன்று நிற்காமல் சென்று மற்றொரு காரில் மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பவன்(Pavan), நிக்கித்(Nikith) ஆகிய இரு மாணவர்களும் காயமடைந்தனர். இவர்களில் பவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |