பிரான்சில் கல்வி கற்க எவ்வளவு செலவு ஆகும்? இந்திய மாணவி விளக்கம்
வெளிநாடுகளில் கல்வி கற்கச் செல்வது இப்போது பலருக்கு சாதாரணமான விடயமாகிவிட்டதுபோல் செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆனால், உண்மையில் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கு எவ்வளவு செலவாகும்?
பிரான்சில் கல்வி கற்க எவ்வளவு செலவு ஆகும்?
அவ்வகையில், பிரான்சில் கல்வி கற்கச் சென்றுள்ள Raine என்னும் இளம்பெண், கல்வி கற்க எவ்வளவு செலவு ஆகும் என்பதை விளக்கியுள்ளார்.
மூன்று ஆண்டுகள் பல்கலைக் கல்விக்காக பிரான்ஸ் சென்ற Raine, கல்விக்கட்டணமாக இந்திய மதிப்பில் 32,00,000 ரூபாய், விசாவுக்காக வங்கியில் வைக்கவேண்டிய கையிருப்பு 11,00,000 ரூபாய், விசா மற்றும் விமான டிக்கெட்டுக்கான செலவு 60,000 ரூபாய், forex cardக்கு 80,000 ரூபாய், பிற செலவுகளுக்கு 6,000 ரூபாய் என மொத்தம் சுமார் 44 லட்ச ரூபாய் செலவானதாக தெரிவிக்கிறார்.

சமூக ஊடகம் ஒன்றில் இந்த தகவலை Raine தெரிவிக்க, பலரும் இது பயங்கர செலவு என்று கூறி தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இவ்வளவு செலவு செய்து வெளிநாட்டுக்குச் சென்று படிப்பது உண்மையில் பிரயோஜனம் உள்ளதுதானா என கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.
Raine வெளியிட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |