20 வயது இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை - ஒரே வாரத்தில் 2வது இந்தியருக்கு நேர்ந்த சோகம்
கனடாவின் ரொரன்றோவில் 20 வயதான இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை
20 வயது இந்தியரான சிவாங்க் அவஸ்தி, கனடாவில் உள்ள ரொரன்றோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகத்தில் பயின்று வந்துள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி, ஹைலேண்ட் கிரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதியில் மர்ம நபர்களால் சிவாங்க் அவஸ்தி சுடப்பட்டுள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்ற போது சிவாங்க் அவஸ்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.
துப்பாக்கியால் சுடப்பட்ட நபர், காவல்துறையினர் வரும் முன்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது இந்த ஆண்டில் ரொரன்றோவில் நடைபெற்ற 51வது கொலை சம்பவம் என டொராண்டோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிவாங்க் அவஸ்தியின் மரணம் தொடர்பாக ரொரன்றோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
We express deep anguish over the tragic death of a young Indian doctoral student, Mr. Shivank Avasthi, in a fatal shooting incident near the University of Toronto Scarborough Campus. The Consulate is in touch with the bereaved family during this difficult time, and is extending…
— IndiainToronto (@IndiainToronto) December 25, 2025
ரொரன்றோவில் கடந்த 19ஆம் திகதி, ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதான இந்திய பெண் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |