அருவருப்பாக இருப்பதாக கூறி தாக்கப்பட்ட இந்திய இளைஞர் வெளிநாட்டில் மரணம்
அமெரிக்காவில் உடற்பயிற்சி மையம் ஒன்றில் கொடூர தாக்குதலுக்கு இலக்கான இந்திய மாணவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அருவருப்பாக இருப்பதாக கூறி
இண்டியானா மாகாணத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி மையத்திலேயே அருவருப்பாக இருப்பதாக கூறி Varun Raj Pucha என்ற 24 வயது மாணவரை சம வயது அமெரிக்க இளைஞர் ஒருவர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.
அக்டோபர் 29ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் Jordan Andrade என்ற இளைஞர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. வருண் ராஜ் மரணமடைந்துள்ள தகவலை அவர் கல்வி பயின்று வந்த Valparaiso பல்கலைக்கழகம் அறிக்கை ஊடாக தெரியப்படுத்தியுள்ளதுடன் இரங்கலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குற்றவாளி என கூறப்படும் Jordan Andrade பொலிசாரிடம் தெரிவிக்கையில், தம்மை வருண் ராஜ் படுகொலை செய்ய இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இருவரும் முன்னர் எப்போதும் பேசிக்கொண்டதில்லை என குறிப்பிட்டுள்ள அந்த இளைஞர், வருண் ராஜ் தம்மை அச்சுறுத்துவதாக ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்காக தாக்குதலில்
ஆனால் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், வருண் ராஜ் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபரல்ல என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும், சம்பவத்தன்று Jordan Andrade பார்வையில் வருண் ராஜ் விநோதமாக அருவருப்பாக காணப்பட்டதாகவும், அதனாலையே தனது பாதுகாப்புக்காக தாக்குதலில் ஈடுபட்டதாகவும் விசாரணையின் போது அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வருண் ராஜ், கணினி அறிவியலில் எம்எஸ் படித்து வந்தார். 2022 ஆகஸ்டு மாதம் முதல் அவர் அமெரிக்காவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |