கல்விக்காக அமெரிக்காவுக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்கள்: பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு படையெடுக்கும் இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் படிப்பதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
புள்ளி விவரங்களின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முதல் இடத்தில் சீனா
அமெரிக்காவுக்கு கல்விக்காக செல்லும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
முதல் இடத்தில் உள்ள சீனாவில் இருந்து 2,90,000 மாணவர்கள் கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து 2,69,000 மாணவர்கள் கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர்.
eduka.com
பெரும்பாலான மாணவர்கள் தொழில்நுட்பம், அறிவியல், வணிகம், தொடர்பான படிப்புகளுக்கு ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |