காசாவில் மருத்துவமனை வாசலில் துப்பாக்கி சண்டை: சிகிச்சைகள் முடங்கியதால் மக்கள் அவதி
இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து இருக்கும் நிலையில் காசாவில் உள்ள 2 பெரிய மருத்துவமனைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதல் 37வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலின் வான் தாக்குதலால் காசாவில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டம் ஆகியுள்ளன மற்றும் 11,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே காசா நகரின் மையப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
AP
ஏற்கனவே தொடர் குண்டு வீச்சு காரணமாக காசாவில் உள்ள அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டி ஆகிய 3 மருத்துவமனைகள் குறிப்பிட்ட அளவு சேதமடைந்துள்ளன, இருப்பினும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அல்-ஷிபா மருத்துவமனையின் நுழைவு வாயில் அருகே இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தஞ்சமடைந்து இருந்தவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மருத்துவமனையில் மக்கள் அவதி
மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் இயங்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதோடு, இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
AFP
மேலும் 45 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளனர், இதைப் போல அல்-குத்ஸ் மருத்துவமனையும் முடங்கியுள்ளது.
மருத்துவமனை நிலவரம் குறித்து அல்-ஷிபா மருத்துவமனை இயக்குநர் வழங்கிய தகவலில், மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் முதலுதவி சிகிச்சைகளை தவிர மற்ற சிகிச்சைகள் செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
முடிந்த அளவு குழந்தைகளை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |