அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு
Indian students enrolling declined in usa: அமெரிக்காவிற்கு உயர் கல்வி படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு வகையில் குடியேற்ற கொள்கைகளை கடுமையானதாக மாற்றி வருகிறார்.
அந்த வகையில் டிரம்ப் நிர்வாகத்தின் பயணக் கட்டுப்பாடுகள், குடியேற்ற கொள்கையில் உள்ள கெடுபிடிகள் காரணமாக அமெரிக்காவுக்கு உயர்கல்வி கற்ற வரும் மாணவர்களின் எண்ணிக்கை பெரும் அளவு சரிந்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு கல்வி கற்ற செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6.9% ஆக குறைந்து 3.39 லட்சமாக பதிவாகியுள்ளது.
இது கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு கல்வி கற்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் மிகவும் குறைவானது ஆகும்.
டிரம்ப் நிர்வாகத்தின் இத்தகைய குடியேற்ற நடவடிக்கைகள் காரணமாக இந்திய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அதிக அளவு பாதித்து வருகின்றனர்