உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பிய பிள்ளைகளை பார்த்து கதறி அழுத பெற்றோர்கள்! நெகிழ்ச்சி வீடியோ
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குடும்பத்தினர் சூழ்ந்து கொண்டு கண்ணீருடன் வரவேற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த பிப்ரவரி 24 முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் போர் தொடுத்து வருகிறது. இதில் ராணுவ வீரர்கள், மக்கள் என அனைவரும் உயிரிழந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் போர் மிதமாக நடந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது.
அந்த வகையில் இன்று விமானம் மூலம் நாடு திரும்பிய இந்தியர்களை அவர்களது குடும்பத்தினர் மார்போடு அணைத்து கண்ணீரோடு வரவேற்ற நெகிழ்ச்சியான காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
#WATCH | Tears and hugs at Delhi airport as stranded Indian students reunite with their families.#RussianUkrainianCrisis pic.twitter.com/zSZiUaxSZM
— ANI (@ANI) March 2, 2022
உக்ரைனில் கடுமையாக போர் நடித்து வருவதால் இந்தியர்கள் நடந்தாவது வெளியேறுங்கள் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் கார்கிவ் நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.