மலிவான தொழிலாளர்களாக கனடா எங்களை சுரண்டுகிறது: கொந்தளிக்கும் இந்திய மாணவர்கள்
ட்ரூடோவின் அரசாங்கம் சுமார் 50,000 வெளிநாட்டு மாணவர்களை பட்டப்படிப்பு முடித்து 18 மாதங்கள் தங்கி வேலை தேட அனுமதி வழங்கியது.
தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க உங்களுக்கு உதவியவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் அங்கீகரிக்கவில்லை.
இந்திய மாணவர்களை கனேடிய அரசாங்கம் மலிவான உழைப்பு ஆதாரமாக பயன்படுத்துவதாகவும், அரசுக்கு தேவைப்படாத போது எங்களை நிராகரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவிட் ஊரடங்கிற்கு பிறகு, நிறுவனங்களில் ஊழியர் பணியமர்த்தப்பட வேண்டிய தேவையான சூழ்நிலை மற்றும் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்ட நேரத்தில், கடந்த ஆண்டு கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் சுமார் 50,000 வெளிநாட்டு மாணவர்களை பட்டப்படிப்பு முடிந்து 18 மாதங்கள் வரை தங்கி வேலை தேட அனுமதி வழங்கியது.
மேலும் முக்கிய துறைகளில் அதிகமான பட்டதாரிகளின் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நிரந்தரமாக குடியேறுவதற்கு தேவையான பணி அனுபவத்தை பெற அனுமதிக்கும் வழியாக அரசாங்கம் அனுமதி நீட்டிப்பை அறிவித்தது.
ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, நிரந்தர-குடியிருப்பு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சிலர் வேலையை தொடர அல்லது நாட்டில் இருக்க அனுமதி அந்தஸ்து கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என இந்திய மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2021ம் ஆண்டின் திட்டத்தின் ஒற்றை பகுதியாக இருந்த இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த முன்னாள் மாணவர்களின், பணி அனுமதி காலம் நிறைவடைவதால், அவர்கள் நிரந்தர இருப்பிடத்தைப் பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் தங்கள் வேலையை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் உள்ளனர்.
இப்போது அவர்கள் வேலை, வருமானம் அல்லது உடல்நலம் மற்றும் சமூக நலன்கள் ஏதுமின்றி பல மாதங்களாக இழுபறி நிலையில் உள்ளது.
இது தொடர்பாக டொராண்டோவில் உள்ள எர்ன்ஸ்ட் & யங்கின் முன்னாள் ஆலோசகர் அன்ஷ்தீப் பிந்த்ரா, அவர்களுக்கு எங்களின் தேவை இருந்த போது அவர்கள் எங்களை சுரண்டினார்கள், ஆனால் தற்போது எங்களுக்கு அவர்களின் ஆதரவு தேவைப்படும் போது யாரும் உதவுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நாங்கள் கட்டணம் மற்றும் வரிகளை செலுத்துகிறோம், அதற்கு ஈடாக எதையும் பெறவில்லை. தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க உங்களுக்கு உதவியவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் நிரந்தரமாக குடியேற விரும்புவோருக்கு சிறந்த ஆதரவை வழங்குவதற்கான வழிகளை பரிசீலித்து வருவதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் பிரேசர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனேடிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெஃப்ரி மெக்டொனால்ட் தனது மின்னஞ்சல் அறிக்கையில் வெளிநாட்டு மாணவர்கள் கொண்டு வரும் "மகத்தான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார நன்மைகளை அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இந்திய அணியின் தோல்வியை தாங்காத கிரிக்கெட் ரசிகர்: சோகத்தில் உயிரிழக்கும் நகைச்சுவை வீடியோ
கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சர்வதேச மாணவர்கள் ஆண்டுதோறும் நாட்டின் பொருளாதாரத்திற்கு C$21 பில்லியன் ($15.3 பில்லியன்) க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் நிரந்தரமாக குடியேற்றத்தில் தேர்ந்தெடுத்த பல்லாயிரக்கணக்கான இளம் பட்டதாரிகள், படித்த தொழிலாளர்களின் ஆதாரமாக மாறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.