இலங்கை அணி மீண்டு வந்துள்ளது! எதிரணியை மதிக்கனும்.. வெற்றிக்கு பின் வீரர்களிடம் பேசிய இந்திய அணி பயற்சியாளர் ராகுல் டிராவிட் வீடியோ
இலங்கை அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணியை அதன் பயிற்சியாளர் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பாராட்டி வீரர்களிடம் உற்சாகமாக பேசியுள்ளார்.
இலங்கை- இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து இந்திய வீரர்களிடம் ஓய்வறையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உற்சாகமாகப் பேசினார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், இலங்கை அணிக்கு எதிராக 2-வது ஒருநாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன்.
From raw emotions to Rahul Dravid's stirring dressing room speech ?️?️@28anand & @ameyatilak go behind the scenes to get you reactions from #TeamIndia's ?? thrilling win over Sri Lanka in Colombo ? ? #SLvIND
— BCCI (@BCCI) July 21, 2021
DO NOT MISS THIS!
Full video ? ?https://t.co/j2NjZwZLkk pic.twitter.com/iQMPOudAmw
ஆனால், கடைசிவரை போராட வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அது கடைசியில் நடந்து வெற்றியாக அமைந்துவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும் கூட கடைசி வரை போராடுவது முக்கியம். சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தால், நம்முடைய அணி வீரர்களின் செயல்பாடு சிறப்பாகத்தான் இருக்கிறது. பந்துவீச்சு, பேட்டிங், அனைத்தும் சிறப்பாகவே இருந்தன. பேட்ஸ்மேன்கள் சிறப்பான முடிவையும் அளித்துள்ளார்கள்.
ஆகச்சிறந்த வகையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நாம் எதிரணியை மதிக்க வேண்டும். நான் ஏற்கனவே கூறியதுபோல் இலங்கை அணி மீண்டு வந்துள்ளது.
நாம் சாம்பியன்போல் திரும்பி வந்துள்ளோம். வெற்றிக்கான வழியைத் தேடியுள்ளோம். உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது என பேசியுள்ளார்.