சரித்திரம் உருவாக்கப்பட்டது! சந்திரயான்-3 தரையிறங்கியதை கொண்டாடிய இந்திய அணி (வீடியோ)
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை இந்திய கிரிக்கெட் அணியினர் நேரலையில் பார்த்து கொண்டாடினர்.
வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3
இந்திய நாடே எதிர்பார்த்த சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறக்கம் இன்று மாலை வெற்றிகரமாக நடந்தது. இந்த பரபரப்பான நொடிகளை இந்தியர்கள் நேரலையில் நகத்தை கடித்தபடி கண்டனர்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியினரும் அயர்லாந்தின் டப்லினில் உள்ள மைதானத்தில் தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
? Witnessing History from Dublin! ?
— BCCI (@BCCI) August 23, 2023
The moment India's Vikram Lander touched down successfully on the Moon's South Pole ?#Chandrayaan3 | @isro | #TeamIndia https://t.co/uIA29Yls51 pic.twitter.com/OxgR1uK5uN
இந்திய அணியினர் கொண்டாட்டம்
சந்திரயான்-3 வெற்றிகரமாக களமிறங்கியதும் பும்ரா உட்பட இந்திய அணியினர் அனைவரும் உற்சாகத்தில் கத்தி கொண்டாடினர்.
இதுதொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அத்துடன் சரித்திரம் உருவாக்கப்பட்டது! மிஷனை வெற்றிகரமாக முடிந்ததற்கு வாழ்த்துக்கள் என இஸ்ரோவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், 'டப்லினில் இருந்து வரலாற்றின் சாட்சியாக இருக்கிறோம்! இந்தியாவின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்ட தருணம்' எனவும் கூறியுள்ளது.
Generative AI by Rahul Gupta/India Today
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |