அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது! தமிழக வீரருக்கு சிக்கல் இல்லை
2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
ஆனால், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வியடைந்தது.
இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 என அவுஸ்திரேலிய முன்னிலைப் பெற்றுள்ளது.
இரு அணகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட டிசம்பர் 26 மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
ALERT?: #TeamIndia for 2nd Test of the Border-Gavaskar Trophy against Australia to be played in MCG from tomorrow announced. #AUSvIND pic.twitter.com/4g1q3DJmm7
— BCCI (@BCCI) December 25, 2020
மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் கோஹ்லி டெஸ்ட் தொடரிலிருந்து விலகி விடுப்பில் சென்ற நிலையில் ரஹானே இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பிளேயிங் லெவன்: ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் (அறிமுகம்), புஜாரா (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் (அறிமுகம்).
முதல் டெஸ்டில் விளைாயடிய விராட் கோஹ்லி (கேப்டன்), ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹா, முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ்-க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தங்களுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது டெஸ்டில் ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹா, முகமது ஷமி, கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.