நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து தொடர்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
வரும் 11ம் திகதி ஒருநாள் தொடர் தொடங்க உள்ள நிலையில், பிசிசிஐ ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது.

மொத்தம் 15 பேர் உள்ளடங்கிய அணியில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்
🚨 News 🚨
— BCCI (@BCCI) January 3, 2026
India’s squad for @IDFCFIRSTBank ODI series against New Zealand announced.
Details ▶️ https://t.co/Qpn22XBAPq#TeamIndia | #INDvNZ pic.twitter.com/8Qp2WXPS5P
ஷுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, விராட் கோலி, கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |