கட்டுப்பாட்டை இழந்து ஓடிய குதிரை: சென்ட்ரல் பாரக்கில் இந்திய இளைஞர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க்கில் நிகழ்ந்த துயரமான குதிரை வண்டி விபத்தில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இளைஞர் உயிரிழப்பு
நியூயார்க் நகரின் புகழ்பெற்ற சென்ட்ரல் பார்க்கில் நடந்த குதிரை வண்டி விபத்தில் இந்தியாவை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோமஞ்ச் மகாஜன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினருடன் முதல் முறையாக ரோமஞ்ச் மகாஜன் சென்ட்ரல் பார்க் சென்றிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடும்பத்தினர் புகைப்படம் எடுப்பதற்காக வண்டியை ஓட்டி வந்த நபர் கீழே இறங்கியுள்ளார். அப்போது வண்டியில் பூட்டப்பட்டு இருந்த சாம்சன் என்ற 7 வயது குதிரை கட்டுப்பாட்டை இழந்து ஓடத் தொடங்கியது.
அப்போது வண்டியில் ரோமஞ்ச் மகாஜன், அவரது பெற்றோர் மற்றும் தம்பி இருந்துள்ளனர்.
வேகமாக ஓடிய வண்டி திருப்பத்தில் நிலைதடுமாறி நடைபாதையில் மோதவே, அப்போது வண்டியில் இருந்த தாய் வண்டியில் இருந்து தவறி விழவே அவரை பிடிக்க ரோமஞ்ச் மகாஜன் தாயை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரும் தவறி விழவே ரோமஞ்ச் மகாஜனுக்கு தலையில் பலமாக அடிபட்டது.
Here’s a video of the horse breaking free and the carriage driver chasing after it.
— Gus Saltonstall (@GusSaltonstall) June 17, 2026
A person comes jumping/falling out of the carriage at the end of the clip. pic.twitter.com/BZmEOXqhxC
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |