பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்தியாவைச் சேர்ந்த இரட்டையர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்தியாவைச் சேர்ந்த 11 வயது இரட்டையர்கள் உயிரிழந்துள்ளனர்.
இரட்டையர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயது இரட்டையர்கள் உயிரிழந்து சாவிலும் இணை பிரியாமல் உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் ரமீஸ்மற்றும் உர்ஷா.
இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் திகதி அன்று உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்த இரட்டையர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து இவர்களது தாய்மாமாவான ஆதில் பதான் கூறும்போது, "பாகிஸ்தான் குண்டுவீச்சில் எல்லை கிராமங்களில் இருந்த 27 பேர் உயிரிழந்தனர். அதில் உர்பா பாத்திமாவும், ஜைன் அலியும் அடங்குவர். இவர்கள் இருவரும் ஒரு நிமிட இடைவெளியில் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலின் போது காயமடைந்த அவர்களது தந்தை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாக்குதல் நடப்பதை அறிந்த நான் காப்பாற்றுவதற்காக ஓடினேன்.
அதற்குள் அவர்கள் இருவரும் இறந்து விட்டனர். இதுவரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமீஸுக்கு 2 குழந்தைகளும் உயிரிழந்தது தெரியாது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |