77 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மின்சாரம் பெற்ற இந்திய கிராமம்.., எங்கிருக்கிறது?
இந்திய மாநிலம் ஒன்றில் உள்ள கிராமத்திற்கு 77 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
எந்த கிராமம்?
இந்திய மாநிலமான, சத்தீஸ்கரில் இருக்கும் கிராமத்திற்கு 77 ஆண்டுகள் கழித்து மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது மோடி தலைமையிலான அரசு நக்சலைட்டுகளுக்கு எதிரான அணுகுமுறைகளைக் கடைபிடித்து வருகிறது. சரணடைதல் முதல் என்கவுண்டர் வரை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மார்ச் 31, 2026-ம் ஆண்டிற்குள் நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இதுவரை 113 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக பீஜாப்பூர் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பிரிவில் மட்டும் 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து பல கிராமங்கள் மீட்கப்பட்டு அங்கு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமமான டைம்னாரில் முதல்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், "பெச்சபால் கிராம பஞ்சாயத்தின் விரிவாக்க கிராமத்தில் உள்ள 53 வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 77 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக இந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |