வீடுகளில் சமையலறையே இல்லாத கிராமம்.., இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா?
இந்திய கிராமம் ஒன்றில் ஒரு வீட்டில் கூட சமையலறை கிடையாது. இதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் உள்ளது.
இந்திய கிராமம்
பொதுவாகவே ஒரு வீட்டில் அடிப்படை தேவை என்றால் அது சமையலறை தான். அதுவும் பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ள சமையலறையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால், இந்திய கிராமம் ஒன்றில் உள்ள வீடுகளில் சமையலறை இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், குஜராத் மாநிலத்தில் உள்ள சந்தன்கி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் தங்களது சொந்த வீடுகளில் உணவு சமைப்பதில்லை.
இது சந்தன்கியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பின்பற்றும் பாரம்பரியத்தின் காரணமாகும்.
அனைத்து குடும்பங்களும் சாப்பிடும்போது சமூக உணவுக்காக ஒன்று கூடுகின்றன. அதாவது அவர்கள் ஒன்றாக அமர்ந்து பல்வேறு குஜராத்தி பாரம்பரிய உணவுகளை சாப்பிடுகிறார்கள்.
சொல்லப்போனால் கிராமத்தின் அனைத்து மக்களும் ஒரு இடத்திற்கு வந்து தங்கள் உணவை சாப்பிடும் முறையை பின்பற்றுகின்றனர்.
இதற்கு காரணம் என்னவென்றால் இந்த கிராமத்தில் உள்ள இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்புகளுக்காக மற்ற நகரங்கள் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதால் கிராமத்தில் பெரும்பாலும் வயதான மக்கள் தொகையே உள்ளது.
இதனால் 55 முதல் 85 வயதுக்குட்பட்ட குடிமக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். அறிக்கையின்படி, இந்த கிராமத்தில் ஒரு காலத்தில் 1,100 குடியிருப்பாளர்கள் இருந்த நிலையில் இப்போது சுமார் 500 பேர் உள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் வயதானவர்கள் தான்.
இங்குள்ள வயதான பெண்கள், நோய்களால் அவதிப்படுவதால் சமைப்பதற்கு சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால் அங்குள்ள கிராம இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ள சமையல்காரர்களால் உணவு சமைக்கப்படுகிறது.
குறைந்தது 35-40 கிராமவாசிகள் சூரிய சக்தியில் இயங்கும் ஏசி சமூகக் கூடத்தில் உணவு சாப்பிடுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |