பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சியை நெருங்கும் இந்திய போர்க்கப்பல்கள்
இரு நாட்டு எல்லைகளிலும் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய போர்க்கப்பல்கள் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நெருங்கி முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கராச்சி துறைமுகம்
இந்திய ஆயுதப் படைகளுக்குள் இருந்து கசிந்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு கடற்படை வடக்கு அரபிக் கடலுக்கு அருகில் நகர்ந்துள்ளது, அதாவது அது தற்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சியிலிருந்து மிக நெருக்கமானத் தொலைவில் உள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும், எதிரியிடமிருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாங்கள் விழிப்புடன் தயாராக இருக்கிறோம். போர் விமானங்கள் மற்றும் பிற கடற்படை கப்பல்களின் இயக்கம் என்பது தற்போது கண்காணிப்பு மற்றும் தடுப்புக்கானது மட்டுமே என்றும் இந்திய தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எட்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியதாக நம்பப்படும் இந்த நடவடிக்கையால், கப்பல்கள் தற்போது சர்வதேச கடல் பகுதியில் உள்ளதாகவும், அங்கே அவை கண்காணிப்பில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இந்தியா நகர்த்தியுள்ள சில கப்பல்கள் விமானம் தாங்கிக் கப்பல் எனவும், சேதம் விளைவிக்கக் கூடியவை, போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள் எனவும் நம்பப்படுகிறது. மட்டுமின்றி, ரஷ்ய தயாரிப்பான BrahMos ஏவுகணையும் கடற்படையால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மணிக்கு 2300 மைல்கள் வேகத்தில் பயணிக்கக் கூடிய BrahMos ஏவுகணையானது 500 மைல்களுக்கு அப்பாலிருக்கும் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.
மேலும், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நாட்டின் வர்த்தகத்தில் 60 சதவீதத்தையும், கடற்படை தளத்தையும் கையாள்வதால், இந்தியாவின் இந்த அதிரடி நகர்வு பாகிஸ்தானுக்கு பெரும் அச்சத்தைத் தூண்டியுள்ளதாகவே தகவல் கசிந்துள்ளது.
300 முதல் 400 ட்ரோன்களை
ஜம்மு நகரில் நேற்று இரவு நடந்த பல குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு கராச்சி துறைமுகத்தை இலக்கு வைக்கும் இந்தியாவின் இந்த முடிவு கசிந்துள்ளது. ஜம்மு, கதுவா, சம்பா, உதம்பூர், ரஜோரி மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட இந்திய காஷ்மீரின் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கின.
ஏப்ரல் 22 அன்று இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் என்பதால் இந்தியா சிந்தூர் நடவடிக்கை என பதிலடி அளித்தது.
இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே, மேற்கு எல்லைகளில் கிட்டத்தட்ட மூன்று டசின் இடங்களில் உள்ள இராணுவ நிறுவல்களை குறிவைத்து, இந்திய வான்வெளியை மீறி பாகிஸ்தான் இரவு முழுவதும் 300 முதல் 400 ட்ரோன்களை ஏவியதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதில் பெரும்பாலானவற்றை இந்தியா முறியடித்துள்ளதாகவே இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |