வெளிநாட்டுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர்: ஒரு துயரச் செய்தி...
வெளிநாட்டுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவருக்கு மூளையில் இரத்தக்கட்டி ஒன்று இருப்பது தெரியவந்த நிலையில், சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.
திடீரென நிலைகுலைந்து விழுந்த இளைஞர்
இந்தியாவிலுள்ள ஹைதராபாதைச் சேர்ந்த B.ருத்விக் ராஜன் (30) என்னும் இளைஞர், உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.
இம்மாதம், அதாவது பிப்ரவரி 16ஆம் திகதி, தன் நண்பர்களுடன் உணவருந்திக்கொண்டிருந்த ருத்விக், திடீரென நிலைகுலைந்து விழுந்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் இரத்தக்கட்டி ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவரது உடலின் வலது பக்கம் செயலிழந்த நிலையில், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்கள்.
ஒரு துயரச் செய்தி...
அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ருத்விக்கின் நிலைமை மோசமடைந்துள்ளதேயொழிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லையாம்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ருத்விக் உயிரிழந்துவிட்டார். நேற்று அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்வி கற்கச் சென்ற ருத்விக், பட்டப்படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |