உக்ரைனிய வீரர்களிடம் சிக்கிய இந்தியர்: வற்புறுத்தி ராணுவத்தில் சேர்த்த ரஷ்யா: தாயின் குமுறல்
போரில் ரஷ்ய படைகளுக்கு பணிபுரிந்த இந்தியர் உக்ரைனிய படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியரை சிறைபிடித்த உக்ரைன்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 22 வயது சஹில் மஜோகி ரஷ்ய படைகளின் ஒரு அங்கமாக போரில் ஈடுபட்டதற்காக உக்ரைனிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரில் முதல் முறையாக ஒரு இந்தியர் சிறைப்பிடிக்க படுவது இதுவே முதல் முறையாகும்.
2 வருடங்களுக்கு முன்பு கணினிப் பொறியியல் படிப்பதற்காக ரஷ்யா சென்ற ஹில் மஜோகி அங்கு போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யா கொடுத்த அழுத்தம்: தாயார் குற்றச்சாட்டு
இந்நிலையில் சஹில் மஜோகி தாயார் ஹசீனா மஜோகி BBC-க்கு வழங்கிய தகவலில், 2024ம் ஆண்டு படிப்புக்காக தன்னுடைய மகன் ரஷ்யா சென்றதாகவும், அங்கு பகுதி நேர வேலை பார்த்து வந்த போது அவர் டெலிவரி செய்த பார்சலில் போதைப் பொருட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்கு எதிராக ரஷ்யாவில் தனியார் வழக்கறிஞரை நியமித்து இருந்த நிலையில் அவர் எப்படி ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்தார் என்று தெரியவில்லை.
சமீபத்தில் வெளியான அவரது வீடியோவுக்கு பிறகே, அவருக்கு அழுத்தம் கொடுத்து ராணுவத்தில் சேர்ந்த சம்பவம் தெரியவந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சம்பளம் மற்றும் விடுதலை
உக்ரைனிய ராணுவத்தால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் கைது செய்யப்பட்ட சஹில் மஜோகி, ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தால் சம்பளத்துடன் கூடிய விடுதலை வழங்குவதாக ரஷ்ய அதிகாரிகள் வாக்குறுதி அளித்த நிலையில் ஓராண்டு ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிய ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 1ம் திகதி போர்க்களத்தில் தன்னுடைய தளபதியுடன் முரண்பாடு ஏற்பட்டதால் அவர்களிடம் இருந்து பிரிந்து வந்து உக்ரைனிய ராணுவத்தின் பதுங்கு குழிகளில் சரணடைந்ததாக சஹில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |