வெளிநாட்டில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்: திடீர் மரணம்
Indian woman dies in Sharjah: ஷார்ஜாவில் வாழ்ந்துவந்த இந்தியப் பெண்ணொருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அஃபீனா ரஹீம் (Dr. Afeena Raheem, 32), தன் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஷார்ஜாவில் வாழ்ந்துவந்தார். அஃபீனாவின் கணவர் யாஸர் (Yasar T), ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
தம்பதியருக்கு மூன்றரை மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அஃபீனாவின் சகோதரியான ரம்ஷீனாவும் தன் மகனுடன் அதே வீட்டில் வாழ்ந்துவருகிறார்.
திடீர் மரணம்
திங்கட்கிழமை காலை அஃபீனாவின் இளைய பிள்ளையின் அழுகுரல் கேட்டு என்ன நடக்கிறது என பார்க்கச் சென்ற ரம்ஷீனா, தன் சகோதரியான அஃபீனா சமையலறையில் சுயநினைவிழந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.

உடனடியாக ஆம்புலன்சை அழைத்ததுடன், அஃபீனாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையும் அளித்துள்ளார் ரம்ஷீனா.
ஆனால், அஃபீனா தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நல்ல ஆரோக்கியமாக இருந்த அஃபீனா எதனால் திடீரென உயிரிழந்தார் என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கும் அவரது குடும்பத்தினர், உடற்கூறு ஆய்வு முடிவுக்கான காத்திருக்கிறார்கள்.
அஃபீனாவின் பெற்றோரும் சகோதரிகளும் இந்தியாவிலிருப்பதால், அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல முடிவுசெய்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
அஃபீனா ஒரு பல் மருத்துவர் ஆவார். தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக தன் வேலையிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார் அஃபீனா.