உலக அழகி போட்டியில் காலடி எடுத்து வைக்கவுள்ள இந்திய பெண்மணி - நந்தினி குப்தா!!
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற 2023-ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா பட்டத்தை வென்றார்.
'மிஸ் இந்தியா' நிகழ்வு
மிஸ் இந்தியா 2023 அழகி போட்டிக்கான இறுதிச் சுற்று நேற்றைய முன்தினம் அன்று மனிப்பூர் மாநிலத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்தி திரையுல நட்சத்திரங்கள் கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
முன்னாள் அழகிகள் சினி ஷெட்டி, ரூபல் ஷெகாவத், ஷினட்டா சவுகான், மனசா வாரணாசி, மனிகா சியோகந்த், மான்யா சிங், சுமன்ராவ், ஷிவானி ஜாதவ் ஆகியவர்களும் இந்த நிகழ்வுக்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
'மிஸ் இந்தியா' பட்டத்தை வென்ற அழகி யார்?
19 வயதுடைய நந்தினி குப்தா ஒரு மாடல் அழகி மட்டுமல்லாமல் நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.
வசீகரமான உடையும் உடல் அமைப்பும் கொண்ட இவரை இந்தியாவின் உலக அழகி என தெரிவுசெய்து பட்டத்தை வழங்கியுள்ளனர்.
மேலும் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா ஃபெமினா மிஸ் இந்தியா 2023 இன் இரண்டாவது இடத்தையும் மணிப்பூரைச் சேர்ந்த தூனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அடுத்ததாக நடைபெறவுள்ள உலக அழகி போட்டிக்காக இந்தியாவின் சார்பில் நந்தினி குப்தா கலந்துக் கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.