2வது திருமணம் செய்யப்போகும் கணவர்! சட்டவிரோத குடியேறியை நாடுகடத்துங்கள் - இந்தியப் பெண்
இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அமெரிக்காவில் வசிக்கும் தனது கணவரை நாடு கடத்த வேண்டும் வலியுறுத்தும் பதிவு வைரலாகியுள்ளது.
போலி புகலிடக் கோரிக்கை
சமன்பிரீத் கவுர் என்ற பெண் தனது கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது.
அவர் தனது பதிவில், தற்போது கலிபோர்னியாவில் வசிக்கும் எனது கணவர் 'போலி புகலிடக் கோரிக்கை' மூலம் அமெரிக்கா சென்றவர் என குற்றம்சாட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் அவர் அமெரிக்காவுக்கு தங்களையும் அழைத்துச் செல்வதாக சமன்பிரீத்திடம் உறுதி அளித்துள்ளார்.
அதன் காரணமாகவே போலி புகலிடம் மூலம் அவர் சென்றது குறித்து புகார் கொடுக்கவில்லை என்று அப்பெண் கூறுகிறார்.
ஆனால், தற்போது அவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக அறிந்த பின்னரே இதனை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை பெற சட்டவிரோதமாக
மேலும் சமன்பிரீத் கவுர் தனது பதிவில், தன் கணவர் பணம் சம்பாதிப்பதற்காகவும், குடியுரிமை பெறுவதற்காகவும் அங்கு சட்டவிரோதமாக சென்றுள்ளார் என்கிறார்.

ஆகஸ்ட் 15க்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லும் விமானங்கள் விலை அதிகரிப்பு.., என்ன காரணம்?
அத்துடன் எனக்கு 7 வயது மகள் இருக்கிறாள், எங்களை கைவிட்டு செல்வதற்கு முன்பு தங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும், அவரை தடுக்க முயன்றால் உயிரை மாய்த்துக் கொள்வார் என்று தனது மாமனார் மிரட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
"எனது கணவர் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான் ஒரு திருமணத்தை மட்டுமே நம்புகிறேன்.
என் கணவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் எனக்கு உதவுமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்" எனவும் சமன்பிரீத் எழுதியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |