ஆசிய குத்துச்சண்டையில் நான்கு தங்கப்பதக்கங்களை ஒரே நாளில் வென்ற இந்தியா!
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நான்கு இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
மினாக்ஷி வெள்ளிப்பதக்கம் வென்றதுடன் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை ஒரே நாளில் வென்றது
ஜோர்டானில் நடந்து வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஒரே நாளில் நான்கு தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்றது.
ஜோர்டானின் அம்மானில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட லல்வினா, பர்வீன் ஹூடா, சவீட்டி, அலிபியா ஆகிய நான்கு வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
லல்வினா 75 கிலோ எடைப் பிரிவில் பங்குபெற்று, உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவாவை தோற்கடித்து தங்கம் வென்றார். லல்வினா 69 பிரிவில் இருந்து 75 கிலோவுக்கு மாறிய பிறகு களம் கண்ட முதல் போட்டி இதுவாகும்.
பர்வீன் ஹூடா 63 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கி, ஜப்பானின் கிடோ மாய்யை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். சவீட்டி கஜகஸ்தானின் குல்சயாவை 81 கிலோ எடைப்பிரிவில் எதிர்கொண்டார். அவர் 5-0 கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
IANS
அதே 81 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய அலிபியா, ஜோர்டானின் இஸ்லாம் ஹூசைலியை வென்றார். இந்தப் போட்டியில் முதல் சுற்றில் இஸ்லாம் ஹூசைலி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அலிபியா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான மினாக்ஷி 52 கிலோ எடைப்பிரிவில் ஜப்பான் வீராங்கனை கினோஷிதா ரின்காவிடம் தோல்வி கண்டார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியா ஒரே நாளில் 4 தங்கம் மாற்று ஒரு வெள்ளி என ஐந்து பதக்கங்களை வென்றது.
Twitter (@AIR)