அவுஸ்திரேலிய அணியை வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை: பிசிசிஐ ஜெய் ஷா வாழ்த்து
அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா வெற்றி
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 21ம் திகதி தொடங்கிய இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களும், இந்தியா 406 ஓட்டங்களும் குவித்தன.
3வது நாளான நேற்று 187 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை அவுஸ்திரேலிய அணி விளையாடியது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 261 ஓட்டங்களை இரண்டாவது குவித்தது.
இதையடுத்து 75 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷபாலி வர்மா 4 ஓட்டங்களிலும், ரிச்சா கோஷ் 13 ஓட்டங்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்கள்.
ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில் 18.2 ஓவர்கள் முடிவில் 75 ஓட்டங்களும் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை சினே ரானா ஆட்ட நாயகி விருது பெற்றார்.
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் 4 அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது, அதே சமயம் மீதமுள்ள 6 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |