இங்கிலாந்தில் தீவிபத்தில் உயிரிழந்த இந்தியப் பெண்: பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
Shivani Rana, 40, died following a house fire at a property in Handsworth Wood, Birmingham: பர்மிங்காமிலுள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்த ஷிவானி ரானா என்னும் பெண் தீவிபத்தில் பலியானார்.
சனிக்கிழமையன்று, பர்மிங்காமிலுள்ள வீடொன்றில் நள்ளிரவில் தீப்பற்றிய நிலையில், அந்த வீட்டில் வாழ்ந்துவந்த ஷிவானி ரானா (40) என்னும் பெண் தீயில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.
தீவிபத்தில் உயிரிழந்த இந்தியப் பெண்
அந்த வீட்டில் ஐந்து பேர் வாழ்ந்துவந்த நிலையில், ஷிவானியும் 33 வயது நபர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

ஆனால், செவ்வாயன்று ஷிவானி உயிரிழந்துவிட்டார். அந்த 33 வயது நபர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வீட்டிலிருந்த மற்றொரு பெண்ணுக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன. மற்ற இரண்டு ஆண்கள் எந்த சேதமுமின்றி தீயிலிருந்து தப்பி வெளியேறிவிட்டார்கள்.
பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையில், ஷிவானி வாழ்ந்துவந்த அந்த வீட்டுக்கு தீவைக்கப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆகவே, அந்த வீட்டுக்கு வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதா, யார் தீவைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிசார், அது குறித்து பொதுமக்களில் யாருக்காவது எந்த தகவலாவது தெரியவந்தால் உடனடியாக தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.