நேபாளத்தில் ஹொட்டலுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்: இந்திய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
நேபாளத்திலுள்ள புண்ணியத்தலம் ஒன்றிற்குச் சென்றிருந்த இந்தியப் பெண்ணொருவர் தங்கியிருந்த ஹொட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில், தப்ப முயன்ற அந்தப் பெண் பரிதாபமாக பலியானார்.
இந்திய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Ghaziabad என்னுமிடத்தைச் சேர்ந்த ராம்வீர் சிங் கோலா (58) என்பவரும் அவரது மனைவியான ராஜேஷ் கோலாவும், இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி, நேபாள தலைநகரான காத்மாண்டுவிலுள்ள கோவில் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
8ஆம் திகதி நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினார்கள்.
9ஆம் திகதி, கோலா தம்பதியர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹொட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்துள்ளார்கள்.
தம்பதியர் மேல் தளம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், ஜன்னல் கண்ணாடியை உடைத்து, படுக்கை விரிப்புகளை இணைத்துக் கட்டி கயிறாக்கி, அவற்றின் உதவியுடன் கீழே இருந்த மெத்தையில் குதித்து தப்பியுள்ளார் ராம்வீர்.
அவரைத் தொடர்ந்து ராஜேஷ் கோலா அந்த துணிகளைப் பிடித்துக்கொண்டு கீழே இறங்க முயன்றுள்ளார்.
ஆனால், துணி வழுக்கி கீழே விழுந்த ராஜேஷ் கோலா, தரையில் சென்று மோதி படுகாயமடைந்துள்ளார். அதிக இரத்தம் வெளியேறியதால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.
இன்று காலை அவரது உடல் உத்தரப்பிரதேசத்திலுள்ள Ghaziabad வந்தடைந்துள்ளது. புண்ணியத்தலத்துக்குச் சென்ற ராஜேஷ் கோலாவுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினர் சொல்லொணாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |