காமன்வெல்த்தில் மேலும் ஒரு பதக்கம்! மிரட்டிய இந்திய அணிக்கு முன்னாள் வீரர் பாராட்டு
காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி பெர்மிங்காமில் நடந்தது.
பரபரப்பான நடந்த இந்தப் போட்டி சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து போட்டியின் முடிவுக்காக பெனால்ட்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
PC: PTI
அதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.
dailyexcelsior
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், வெண்கலம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'புத்திசாலித்தனமான ஆட்டம். கடினமாக உழைத்து இந்தியப் பெண்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். நீங்கள் போராடிய மனப்பான்மையை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.
Brilliant . A hard earned bronze for the Indian Girls. Many congratulations girls. The spirit with which you fought was such a joy to see. #CWG22 pic.twitter.com/1pZ7j601r9
— Virender Sehwag (@virendersehwag) August 7, 2022