பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் - இரு குழந்தைகளுடன் எல்லையில் தவிப்பு
பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண், இரு குழந்தைகளுடன் எல்லையில் தடுத்து நிறுத்தபட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.
இதனையடுத்து, எல்லைகளை மூடுவது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் விசாக்களை ரத்து செய்வது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இதனால், கல்வி, வேலை மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற பல்வேறு காரணங்களுக்காக, இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு
இதற்கான காலக்கெடு இன்று முடிவடையும் நிலையில், ஏராளமான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்கள் இதன் காரணமாக பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சர்தானா பகுதியைச் சேர்ந்த சனா என்பவர், கடந்த 2020ம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த நபரை திருமணம் செய்துக்கொண்டார்.
நீண்ட நாட்களாக அவர் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தால், அவரது 2 குழந்தைகளுக்கும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றுள்ளார்.
அந்த நாட்டு விதிப்படி, 9 ஆண்டுகள் பாகிஸ்தானில் வசித்தால்தான் குடியுரிமை கிடைக்கும் என்பதால், சனாவிற்கு இன்னும் பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்கவில்லை.
கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி, 45 நாட்கள் விசாவில் தனது குழந்தைகளுடன் சனா உத்திரப்பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற அவரின் 2 குழந்தைகளும் இந்தியாவில் இருக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் தடுத்து நிறுத்தம்
இதனால் தனது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு புறப்பட்ட சனாவை, அட்டாரி எல்லையில் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சனாவிடம் இந்திய பாஸ்போர்ட்டும், அவரது குழந்தைகளிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்திருக்கிறது.
இதன் காரணமாக, அவரது குழந்தைகள் மட்டும் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தைகளை தனியாக அனுப்ப முடியாது என சனா மறுத்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள், சட்டவிரோதமாக இங்கே இருப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |