பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர்
இந்திய இளம்பெண்ணொருவர் கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், குற்றவாளி இன்னமும் சிக்காததால் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர்.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24) என்னும் இளம்பெண்.

ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்தின் Northamptonshireஇலுள்ள Corby என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.
இந்நிலையில். 2024ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.
ஹர்ஷிதாவை அவரது கணவரான பங்கஜ் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

விடயம் என்னவென்றால் இந்த துயர சம்பவம் நடந்து ஒன்றரையாண்டுகள் ஆகியும் பங்கஜ் இதுவரை சிக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் பிரித்தானியா வந்திருந்த ஹர்ஷிதாவின் சகோதரியான சோனியா தபாஸ், என் சகோதரியின் வலி, பலம், நினைவுகள் எல்லாமே எனக்குள்ளேயே இருக்கின்றன.
என் சகோதரியின் மரணத்துக்கு நீதி கிடைக்க பாடுபடுவேன் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய பொலிசாரும் பங்கஜை தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |