பிரித்தானிய இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம்
பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான கேட் மிடில்டனும் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வில்லியம் கேட் தம்பதியர் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம்
இந்தியாவின் மும்பை நகரில் நடைபெறும் Earthshot விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக வில்லியம் கேட் தம்பதியர் இந்தியாவுக்கு செல்ல இருக்கிறார்கள்.

அப்போது அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டு வில்லியம் கேட் தம்பதியர் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்கள் மும்பை, டெல்லி, அஸ்ஸாம் மற்றும் ஆக்ராவின் புகழ் பெற்ற தாஜ்மஹாலுக்கும் வருகை புரிந்தார்கள்.
அந்தப் பயணம் இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுபடுத்துவதாக அமைந்ததால் வெற்றிகரமான ஒன்றாக கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மீண்டும் வில்லியம் கேட் தம்பதியர் இந்தியாவுக்குச் செல்ல இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |