இலங்கையை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி..மகுடம் சூடிய இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.
ஸ்மிரிதி மந்தனா வாணவேடிக்கை
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நிஸ்ஷினில் நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி முதலில் துடுப்பாடியது. வாணவேடிக்கை காட்டிய ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana) அரைசதம் விளாசினார்.
மறுமுனையில் ஷபாலி வெர்மா 29 பந்துகளில் 48 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஹர்மன்ப்ரீத் 19 ஓட்டங்களில் வெளியேற, ஸ்மிரிதி மந்தனா 45 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசினார்.

சுருண்ட இலங்கை
ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 49 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 29 (21) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஏனைய வீராங்கனைகள் சொதப்பினர்.
ஓட்டங்கள் எடுக்க தடுமாறிய இலங்கை அணி 15.4 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு சுருண்டது.
தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஷபாலி வெர்மா, ஷ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
