வெளிநாட்டுக்கு பிழைப்பு தேடி சென்ற இந்தியருக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்! சூப்பரான வீடியோ
வெளிநாட்டுக்கு பிழைப்பு தேடி சென்ற இந்தியருக்கு லொட்டரியில் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரிய பரிசு விழுந்துள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் கணேஷ் ஷிண்டே. 36 வயதான கணேஷ் துபாயில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கணேஷ்க்கு Dubai Duty-Free Millenium லொட்டரி ஜாக்பாட்டில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதனிடையில் ஜாக்பாட்டை வென்ற தகவலை அறிந்து கணேஷ் நம்பமுடியாமல் அதிர்ச்சியடைந்தார்.
அவர் கூறுகையில், பரிசு பணத்தை வைத்து புதிய அடுக்குமாடி வீடு மற்றும் கார் வாங்க போவதாகவும், மீதி பணத்தை தனது குழந்தைகள் கல்விக்காக சேமிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Were you the lucky one? Find out the latest dollar millionaire unveiled today in the Millennium Millionaire promotion Series 363 and the two winners in the Finest Surprise Promotion Series 1778 and 461!#DubaiDutyFree #FullofSurprises #MillenniumMillionaire pic.twitter.com/uJgLti8ECm
— Dubai Duty Free (@DubaiDutyFree) July 14, 2021
மேலும் இந்த லொட்டரியில் துபாயில் வசிக்கும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜஸ்டின் பிரன்ச் (52) என்பவருக்கு Range Rover Sport HSE Dynamic 5.0 என்ற சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளது.
நேபாளத்தை சேர்ந்த ரோகித் என்ற 30 வயது இளைஞருக்கு BMW R nineT Scrambler சொகுசு பைக் பரிசாக விழுந்துள்ளது.