வெளிநாட்டில் இலங்கை நண்பருடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கிய இந்தியருக்கு அடித்த பெரிய அதிர்ஷ்டம்! எவ்வளவு தெரியுமா?
நண்பர்களுடன் சேர்ந்து வாங்கிய லொட்டரி டிக்கெட்டுக்கு இந்தியாவை சேர்ந்த குடும்ப தலைவருக்கு மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த 37 வயதான சோமராஜன் கடந்த 2008ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று ஓட்டுனர் பணியில் சேர்ந்தார்.
சோமராஜன் கடுமையாக உழைத்த நிலையில் சமீபத்தில் 3,500 dirhamsல் அவருக்கு புதிய வேலை கிடைத்தது. இந்த நிலையில் தனது 9 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக பணம் போட்டு Abu Dhabi Big Ticket வாங்கினார் சோமராஜன்.
அவரின் 9 நண்பர்களும் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மொத்தமாக 500 dirhams கொடுத்து லொட்டரி டிக்கெட் வாங்கப்பட்ட நிலையில் அதற்கு 20 million dirhams (இலங்கை பண மதிப்பில் 1,08,49,30,014.80) பரிசாக விழுந்துள்ளது.
இந்த பரிசு பணத்தை நண்பர்கள் அனைவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவுள்ளனர். சோமராஜன் கூறுகையில், நான் துபாயில் டேக்சி ஓட்டுனராக வேலை செய்ததோடு பல நிறுவனங்களிலும் வேலை செய்துள்ளேன், என் வாழ்க்கை கடினமானதாகவே இருந்தது.
என் மனைவி ஹொட்டலில் வேலை பார்க்கிறார். எனக்கு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்றே ஆசை.
இந்த பரிசு பணத்தை தலா 2 million dirhams என 10 பேரும் பிரித்து கொள்ளவுள்ளோம். லொட்டரி டிக்கெட்டை என் பெயரில் தான் வாங்கினோம்.
நான் மற்றவர்களுக்கு சொல்வது என்னவெனில், உங்கள் அதிர்ஷ்டத்தை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
என் அதிர்ஷ்டமான நாள் வரும் என்று நான் எப்போதும் உறுதியாக இருந்தேன் என கூறியுள்ளார்.