தகர்ந்தது டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கப் பதக்க கனவு.. வெள்ளி வென்றார் மல்யுத்த வீரர் ரவிகுமார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ரவி குமார் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டி 57 கிலோ எடைப் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ரவி குமார், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் UGUEV Zavu மோதினர்.
6 நிமிடங்கள் முடிவில் 4-7 என்ற புள்ளி கணக்கில் ரவிக்குமாரை வீழ்த்தி UGUEV Zavu தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ரவி குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Two big tackles that got Ravi Kumar handy points in the men's 57 kg #wrestling final, enroute to his #Olympic #silver medal! ?#Tokyo2020 | #UnitedByEmotion | #StrongerTogether | #BestOfTokyo pic.twitter.com/FNCuF4c5B3
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 5, 2021
டோக்கியோவில் ஒலம்பிக்கில் இந்தியா வென்ற 5வது பதக்கம் (2 வெள்ளி, 3 வெண்கலம்) இது என்பது குறிப்பிடத்தக்கது.
Another medal for @WeAreTeamIndia!
— Olympics (@Olympics) August 5, 2021
Kumar Ravi of #IND takes #silver in the men's freestyle 57kg #Wrestling#StrongerTogether | @Tokyo2020 | @Wrestling pic.twitter.com/7bNZ4jdfya
இதுவரை பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி, பேட்மிண்டனில் பிசி சிந்து வெண்கலம், குத்துச்சண்டையில் லவ்லினா வெண்கலம், ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலம், தற்போது மல்யுத்தத்தில் ரவி குமார் வெள்ளி வென்றுள்ளார்.