அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு கத்திக்குத்து: கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள குற்றவாளியின் வார்த்தைகள்
அமெரிக்காவில் இந்திய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், அவர் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால், அவரைக் கத்தியால் குத்தியதாக குற்றவாளி தெரிவித்துள்ள விடயம் கொந்தளிக்கச் செய்வதாக அமைந்துள்ளது.
உடற்பயிற்சிக்கூடத்துக்கு சென்றிருந்த இளைஞர்
இந்தியாவின் தெலுங்கானாவைச் சேர்ந்த வருண் (Pucha Varun Raj, 24), அமெரிக்காவில், இண்டியானாவில் அமைந்துள்ள Valparaiso பல்கலையில் MS படிக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை உடற்பயிற்சிக்கூடம் ஒன்றிற்குச் சென்றிருந்த வருணை ஜோர்டன் (Jordan Andrade, 24) என்னும் அமெரிக்க இளைஞர் நெற்றிப்பொட்டில் கத்தியால் குத்தினார்.
www.greatandhra.com
படுகாயமடைந்த வருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உயிர் பிழைக்க பூஜ்யம் முதல் ஐந்து சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கொலையாளியின் வார்த்தைகள்
இப்படி ஒரு இளைஞரைக் கத்தியால் குத்திவிட்டு ஜோர்டன் கூறியுள்ள வார்த்தைகளைக் கேட்டால் யாருக்கும் கோபம் கொந்தளிக்கும்.
BNN Breaking
ஆம், வருண் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததாகவும், அவரால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம், தன்னை அவர் கொன்றுவிடலாம் என்றும் தான் கருதியதாக தெரிவித்துள்ள ஜோர்டன், ஆகவே தான் சரியான வகையில் ரியாக்ட் செய்ததாக கூறியுள்ளார்.
ஜோர்டன் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி, பயங்கர தாக்குதல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |